நீ என்னை பிரிந்தாலும்  
என் மனதில் விதையாய்  விழுந்து 
இப்போது மரமாய் வளர்ந்து நிற்கிறாய் 
நீ என்னை மறந்தாலும் 
என் நினைவுகள்  தென்றலாக  உன்னை  தீண்டாதோ 
இல்லை 
என் கண்ணீர் மழையாகதான்  உன்  மீது பொழியாதோ
நீ என்னை வெறுத்தாலும் 
உன்  குழந்தை தனமான சண்டைகளும் 
உன் அழகான முக கோணல்களும் 
உன் இதழின் இசையான அழகிய சிரிப்பும்  
உன் அர்த்தமற்ற மழலை பேச்சும் 
என்னோடுதான் இருந்தது 
நீ இருந்த நாட்கள் அழகாய் இருந்தது 
ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக
இரவு பொழுதுகள் ஒன்றொன்றும்  உன் நினைவுகளோடு 
இப்போது 
விடியலுக்காக ஏங்கி கொண்டிருந்தது உன் முகத்தினை காண 
No comments:
Post a Comment