Here am going to write something what i know.please forgive me if you wont like.Feel free to call me on my mobile 9600135653.my mail id balabala2007@gmail.com

Monday, October 25, 2010

கடவுள் ?????


 கடவுள் இருக்கிறான் என்று சொல்லும் அன்பர்களுக்கு என்னுடைய கேள்விகள்,,,,

பெற்றவர்கள் செய்த பாவம் அதனால் தான் பிள்ளைகள் பாதிக்கபடுகிறார்கள் என்று சொல்லி தப்பிக்க நினைக்க வேண்டாம் ,,,,கடவுளுக்கு நீதி நேர்மை எதுவும் தெரியாதா? இல்லை பாவம் செய்தவர்களை தண்டிக்க பயமா ?

இது எப்படி இருக்கிறது என்றால்,,,பாவம் செய்தவர்களை விடுத்து சம்பந்தம் இல்லாதவர்களுக்கு தண்டனை தருவது ,,,உன்னை அழ வைப்பதற்காக உன்னை விடுத்து உன் பிள்ளைகளுக்கு தண்டனை தருவது ,, இத்துனை குருரமானவனா கடவுள்,,, மனநிலை பாதிக்க பட்டவனா (ஆங்கலத்தில் சைகோ என்று கூறுவார்களே அவர்களை போன்று )

இல்லை அது அவர்கள் போன ஜென்மத்தில் செய்த தவறினால் இந்த ஜென்மத்தில்  கிடைத்த தண்டனை என்று சொல்லியும் தப்பிக்க நினைக்க வேண்டாம்,,,,

நாம் ஒரு வேலையை செய்கிறோம் ,,, அந்த வேலையை திறம்பட செய்தால் அதை நாம் தொடர்ந்து செய்வோம் ,,,, முடியவில்லை என்றால் முயற்சித்து பார்போம் ,,,, அதற்கும் முடியவில்லை என்றால் அந்த வேலையை விட்டு விடுவோம் ,,,, சாதாரண மனிதர்களாகிய நமக்கே இது பொருந்தும் போது,,,, ஒரு மனிதனை நல்லவனாக கூட படைக்க தெரியாதா கடவுள் அந்த வேலையை தொடர்வது அபத்தமானது ,,,, அதுவும்மின்றி அவனை அந்த ஜென்மத்தில் தண்டிக்காமல் அடுத்து ஜென்மம் வரை காத்திருப்பது எந்த வகையில் நியாயம்,,,,இந்த ஜென்மத்தில் அவன் போன ஜென்மத்தில் செய்த பாவம் தெரியவா போகிறது,,,,

கடவுள் உண்டா என்று கேட்பவர்களுக்கு நீங்கள் அதிகபட்சமாக அளிக்கும் பதில்(பதிலில்லை கேள்வி ) --->> உயிர் என்று ஒன்று இருந்தால் அதை கண்ணில் காட்டுங்கள் ,,,

கடவுளை உணரத்தான் முடியுமா என்றால் உங்கள் பதில் ---->>>காற்று இருப்பதாய் உணரதான் முடியும்  கண்ணில் பார்க்க முடியாது அதுபோலதான் கடவுள் என்று எவ்வளவு நாட்களுக்குதான் நீங்கள் உங்களையே ஏமாற்றி கொண்டு இருக்க போகிறீர்கள் ,,,,,

கண் முன்னால் நடக்கும் கெட்டவைகளைதட்டி கேட்க முடியாத தைரியம் இல்லாத கோழை  உங்களுக்கு   கடவுள் ,,,, 
அல்லது அவற்றை அரங்கேற்றி வேடிக்கை பார்த்து ஆனந்தம் அடைய  நினைப்பவன் உங்களுக்கு  கடவுள் ,,,, 

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் போரிலும் இருப்பான் சுனாமியுளும் இருப்பான் பூகம்பத்திலும் இருப்பான் பேரழிவுகளில் எல்லாம் இருப்பான் தீ விபத்துகளிலும் இருப்பான் போலிச்சாமியார்கலாகவும் இருப்பான் அவர்கள் கொடுக்கும் லஞ்சங்களை வாங்கிகொண்டு அரசியல்வாதிகளாகவும் இருப்பான் அடுத்தவர்களை காயப்படுத்தும் ரௌடியகவும் இருப்பான் பசிக்கு  பலியாகும் குழந்தையாகவும் இருப்பான் , ,,, இன்னும் எவ்வளவோ சொல்லாம் உங்கள் அரக்கத்தனம் கொண்ட கடவுளை பற்றி ,,,,,

பின்வரும் நிழற்படங்களை பாருங்கள் ,,,, அந்த முகங்களின் சிரிப்பு ,ஏக்கம்,,கஷ்டங்களை பாருங்கள் ,,, பிறகு சொல்லுங்கள் உங்கள் கருத்துக்களை ,,,  


























4 comments:

subra said...

எவனும் வாய திறக்க மாட்டான்,உங்கள் வேதனையில்
நானும் பங்கு கொள்கிறேன் .

முனைவர் இரா.குணசீலன் said...

கடவுளா

அப்டினா என்ன??????????????????

அது என்ன எதுவும் சாப்பிடும் உணவா????

sivakumar said...

கடவுள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலேயுள்ள் அவலங்களையெல்லாம் அனுமதித்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். மனிதன் கண்டுபிடிப்புகளில் மோசமானது மிகவும் இந்தக் கடவுள்

G u l a m said...

சகோதரர். டாக்டர், உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
//பெற்றவர்கள் செய்த பாவம் அதனால் தான் பிள்ளைகள் பாதிக்கபடுகிறார்கள் என்று சொல்லி தப்பிக்க நினைக்க வேண்டாம் ,,,,கடவுளுக்கு நீதி நேர்மை எதுவும் தெரியாதா? இல்லை பாவம் செய்தவர்களை தண்டிக்க பயமா ?//
கடவுள் -குறித்து தவறான புரிதலுடன் தொடங்கி இருக்கிறீர்கள்., என்பது என் எண்ணம் அதற்கு மேற்கண்ட உங்கள் வார்த்தைகளே சான்று பகிர்கிறது.,
சரி உங்கள் வாதப்படி கடவுள் இல்லை., இத்தகைய நிலைகளுக்கு யார் காரணம்- விளக்குவீர்களா?
நீங்கள் விரும்பினால் கடவுள் குறித்து ஐயங்களுக்கு என் தளத்தை பார்வையிடுங்கள் வேண்டுமானால் அங்கு கருத்து பரிமாற்றம் செய்துக்கொள்ளலாம்., கடவுள் இல்லை என்று சொல்லும் அன்பர்களுக்கு என்னுடைய கேள்விகள்,,,, சிலவற்றை அங்கு தொகுத்து வைத்திருக்கிறேன் டாக்டர். அவர்களுக்கு நேரமிருந்தால் பார்வையிட்டு எனக்கு பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்