Here am going to write something what i know.please forgive me if you wont like.Feel free to call me on my mobile 9600135653.my mail id balabala2007@gmail.com

Saturday, October 23, 2010

விவாகரத்து

விவாகரத்து
மகனுக்கும் பெற்றோருக்கும் இடையே
மருமகள் வந்த பின்னே  ,,,,

சொல்ல மறந்த வார்த்தைகள் !!!

நெடு நாட்களாய் எழுத நினைத்த ஒன்றை எழுத முற்படுகிறேன் 
முடியவில்லை என்னால் வார்த்தைகள் நட்சத்திரங்களை போல சிதறி கிடக்கிறது 

எழுத நினைத்த அவளோ இன்று என்னுடன் இல்லை,,,
பின் எதற்காக எழுதிகிறாய் என்று என் மூளை கேட்கிறது ???
இருக்கும் பொழுது சொல்ல நினைத்தவைகளை இப்போதாவது 
சொல்லிவிடு அவள் இருப்பதாய் உணர்ந்து என்று என் மனது விம்மியது,, 

அவள் கோபமாக பார்க்கும் பார்வையை ரசிப்பதற்காக பொய்யான சண்டை போட்டதும் ,,
அவள் அழகான கால் கொலுசின் சத்தத்தை அவளுக்கு தெரியாமல் ரசித்து கேட்டதும்  
அவள் விரலின் சுவையறிய என் விரலை நான் வெட்டிக்கொண்டதும் 
அவள் இதழ்களில் இருந்து வரும் சிரிப்பிற்காக பல கோமாளித்தனங்களை நான் செய்ததும்
அவள் அழகான  முகத்தை காண நான் பேருந்து நிறுத்தத்தில் தவமாய் நின்றதும் 
அவள் இடம் நான் சொல்லாமல் விடுத்த வார்த்தைகள் பல உண்டு ,,

நெடும்தூரம் சென்றவள் ,,என் கண்ணில் இருந்து மறைந்தாலே தவிர என் நினைவுகளில் இருந்து அல்ல ,,,,
காற்று மேகத்தை தழுவும் பொழுது மழை வரும் அது போல 
இன்றும் அவளின் நினைவலைகள் என்னை தழுவும்  பொழுது கண்ணில் நீர் வருகிறது ,,,,,

Wednesday, October 20, 2010

அதோ அவள் நடந்து செல்கிறாள் கடற்கரையில் ,,,,,,,

அதோ அவள் நடந்து செல்கிறாள் கடற்கரையில் ,,,,,,,

தன் அழகிய மெல்லிய வளைந்த பாத தடங்களை ஒன்றன் பின் ஒன்றாக விடுத்து செல்கிறாள் ,,,,,
வேகமாக வந்த கடல் அலைகள் அவள் அழகிய பாத தடங்களை வலிக்காமல் அழித்து விட்டு சென்றன ,,,,,

நான் கோபமாக அலைகளை நோக்கி கேட்டேன் , என்ன திமிர் உங்களுக்கு என்னவளின் பாத தடங்களை அழித்து விட்டு செல்கிறீர்கள் !!

அலைகள் ஒன்றாக கூறியது, கோபப்படாதீர்கள் !!!அந்த தடங்களை நாங்கள் அழிப்பது இல்லை ,,,,
அந்த அழகிய தடங்களின் மீது மணலை நிரப்பி எங்களுடனே பத்திரமாக வைத்து கொள்கிறோம்,,,,
இல்லையென்றால் வேறு யாராவது மிதித்து அழித்து விடுவார்கள் என்று !!!!

Sunday, October 17, 2010

பிச்சைக்காரன்!!!!!!!

அன்பிற்கு ஏங்கும் அகதிகளை 
அடிமைகளாய் ஏற்க துணியும் 
அன்பில்லாத பிச்சைக்காரர்களே 

கண்ணுக்கு தெரியாத கடவுளுக்கு தனியறை கொடுக்க தெரிந்த உனக்கு 
கண்ணுக்கு தெரிந்த கடவுள்களுக்கு வீட்டில் இருக்க இடமில்லையா ?

ஐந்தறிவுள்ள ஜீவனுக்கு பசியாற்ற சோறு போட முடிந்த உன்னால் 
ஆறறிவுள்ள ஜீவன்களுக்கு பசியாற கொடுக்க உணவு இல்லையா ?

நீ பெற்ற குழந்தைகளோடு  அன்புடன் வாழ தெரிந்த உனக்கு 
உன்னை பெற்றெடுத்த ஜீவன்களோடு அன்புடன் வாழ தெரியாமல் போனது எப்படி?

தன் கருவறையில் இடம் கொடுதவளுக்கும் 
தன் வியர்வையால் உன்னை உயர்தியவற்கும் 
நீ கொடுக்கும் பரிசு முதியோர் இல்லம். 

உனக்கு கோடி கணக்கில் பணம் இருந்தாலும் 
நீ என்றும் அன்பில்லாத பிச்சைக்காரன்தான்....