Here am going to write something what i know.please forgive me if you wont like.Feel free to call me on my mobile 9600135653.my mail id balabala2007@gmail.com

Thursday, October 28, 2010

அடிமட்ட தொண்டன்!!!!

சுதந்திர இந்தியாவை நிர்வாணம் மன்னிக்கவும் நிர்வாகம் செய்யும் அரசியல்வாதிகளை இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் பலர் நம்மில் உள்ளோம்,,
நமக்கு மூளை என்று ஒன்று இருந்ததாமே எங்கே அது என்று தேடக்கூடிய அளவிற்கு மழுங்கி போனதை இன்னமும் உணராமல் சொரனையற்ற ஜென்மமாய் திரிந்து கொண்டு இருக்கிறோமே எப்படி நம்மால் மட்டும் முடிகிறது,,, 

வழக்கறிஞ்சர் பிள்ளைகள் படித்து வழக்கறிஞ்சர் ஆவது
மருத்துவர் பிள்ளை படித்து மருத்துவர் ஆவது 
விவசாயி பிள்ளை விவசாயி ஆவது ,,,அதுபோலதனே 
எங்கள் தலைவர்களின் பிள்ளைகளும் படித்தோ படிக்காமலோ தலைவர்களாவது தானே நியாயம் .இதை சிலர் குடும்ப அரசியல் என்று கூறுவது எந்த 
வகையில் நியாயம் ????

ஒலிம்பிக்கில் தங்கம் கிடைத்தால் எவ்வளவு பெருமையான விஷயமோ அதை விட பெருமையான விஷயம் ஒன்று இருக்கிறது,,, அது எங்கள் இந்தியர்களின் வங்கி கணக்கு இந்தியாவில் அல்ல சுவிஸ்சில் ,,, நாம்தானே முதல் இடத்தில உள்ளோம் 
,,இதெல்லாம் நம்முடைய சாதனை அல்லவா,,,,,(http://taxguru.in/finance/swiss-bank-revealed-indian-have-more-money-then-rest-of-the-world.html )  இவர்களுடைய தோராய கணக்குப்படி நாற்பத்தைந்து கோடி ஏழை இந்தியர்களுக்கு ஆளுக்கு தலா ஒரு லட்ச ருபாய் கொடுக்கலாம் ,,,, அனால் அவை அனைத்தும் அங்கே உறங்கி கொண்டு இருக்கின்றன சொகுசாய்,,,,,இவ்வளவு பணமும் நமக்கு தெரியாமல் அரசியல்வாதிகள் துணையோடு சேர்த்து வைத்திருக்கும் நல்லவர்கள் நிறைய பேர் உள்ளனர் அதில் அரசியல்வாதிகளும் அடங்குவர் ,,,,

நம் தலைவர்கள் சொகுசாய் குளிர் சாதன அறையில் தூங்கினால் தானே தொண்டர்கள்   நமக்கு கொசு கடிக்கும் இடத்தில் தூக்கம் வரும்,,,
நம் தலைவர்கள் கார்களில் சென்றால் தானே நமக்கு ஓட்டுவதற்கு மிதிவண்டியாவது கிடைக்கும் 
நம் தலைவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நம்முடைய வீட்டிற்கே வருவார்கள் அல்லவா அது எவ்வளவு பெருமையான விஷயம் நமக்கு,,, 
நம் தலைவர்கள் கால்களில் விழுவதை விடவா சிறந்தது நம் பெற்றவர்களின் கால்களில் விழுவது ,,,, ச்சி எவ்வளவு கேவலமானது அல்ல 
நம் தலைவர்களுக்கு ஆயிரம் செருப்புகள் வேண்டும் நடப்பதற்கு விதவிதமாய் ,,அதுதானே செருப்பு இல்லாத நமக்கு பெருமை 
நம் தலைவர்களின் வாரிசுகள் அயல் நாட்டில் படித்தால் தானே நம் வாரிசுகள் ஆலமரத்தடியில் படிக்கும் 
நம் தலைவர்கள் கொட நாட்டில் ஓய்வெடுத்து சுகமாய் இருந்தால் தானே ,,நாம் கோடை வெய்யிலில் ஓய்வின்றி உழைக்க முடியும் 
நம் தலைவர்களின் வளர்ப்பு பிள்ளை திருமணத்திற்கு   நூறு கோடி ரூபாயில் செலவு செய்ததால் நமக்கு எவ்வளவு பெருமை,,,நம் பிள்ளைகளுக்கு திருமணம் என்பது கேள்வி குறியாக இருக்கும் போது,,,,

நம் தலைவர்களின் கொள்கையே நம் கொள்கை ,,,,,இன்று இந்த கட்சியுடன் கூட்டணி நாளை அந்த கட்சியுடன் கூட்டணி என்று எப்படி மாறினாலும் நமக்கு சூடு சொரணை எதுவும் இல்லாமல் சொல்லுவோம் ,, வாழ்க வாழ்க ஒழிக ஒழிக ,,,, அந்த வார்த்தைகளை பேச மட்டுமே நம்மால் முடியும் அது மிக பெரிய விஷயமாயிற்றே ,,,,   

http://en.wikipedia.org/wiki/Category:Political_parties_in_India  இதுவும் கூட சாதனை தான்,,,, நம் நாட்டில் எத்தனை கட்சிகள் ,,,நமக்கே தெரியாமல் .
ஜாதிக்கு ஒரு கட்சி இருந்தால் தானே நம்ம ஜாதிக்கு பெருமை.நம்ம இந்தியாவுக்கு பெருமை ,,,, வேற்றுமையில் ஒற்றுமை ,,,, மன்னிக்கவும் வேற்றுமையில் வேற்றுமை,,,,

http://timesofindia.indiatimes.com/india/At-Rs-84-crore-Jagan-Mohan-sets-pace-with-advance-tax-payment/articleshow/6731651.cms இதை போன்று நல்லவர்களும் நம் நாட்டில் உள்ளனர்,,, கேவலம்  எண்பத்தி நான்கு கோடி வரிப்பணம்  முன்கூட்டியே செலுத்திய கதாநாயகர் நம் இந்தியாவில் உண்டு,,, அவர் போன வருடம் செலுத்தியது ஆறு அரை கோடி வரிப்பணம் அனால் இந்த வருடம் எண்பத்தி நான்கு கோடி ,,,ஆயிரத்து நூறு சதவிகிதம் அதிகமாக அதுவும் ஒரே வருடத்தில் ,,,, யாரால் முடியும் சொல்லுங்கள்,,,,அவருடைய சொத்து மதிப்பு பத்து வருடங்களுக்கு முன்பு எவ்வளவு என்று யோசித்தா பார்க்க போகிறோம், 
நம் அரசியல்வாதிகள் படிக்காத காரணத்தினால் தான்,,, கல்வி சேவைக்காக பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்,,, கல்வியை இலவசமாக சொல்லி கொடுத்தால் நன்றாகவா இருக்கும்,,, அதனால் தான் பல லட்சங்களை நன்கொடையாக மட்டும் பெறுகின்றனர் ,,

நாம் யாருக்கு ஒட்டு போடுவோம்,,, கொலை செய்யும் வீரமானவர்களுக்கு ,லஞ்சம் வாங்கும் நேர்மையனவர்களுக்கு ,கூடிய விரைவில் அவர்கள் 
தங்கள் கல்வி நிறுவனங்களில் பின்வரும்
 படிப்புகளை ஆரம்பித்தால் ஆச்சிரியபடுவதற்கு இல்லை ,,,,,
Masters  in murder
Masters in corruption
Masters in family  politics
Masters in robbery 
Masters in Making alliance
Masters in making money

இவர்களுக்காக நம் வேர்வையை சிந்தி பாடுபடுவதிலே நமக்கு எவ்வளவு சுகம்,,,, நம் வீடு எக்கேடு கேட்டு போனால் என்ன,,, என் தலைவன் தலைவி நல்ல இருக்காங்களா அதுவே எனக்கு போதும்,,,,

நம்முடைய மூளை சிந்திக்க ஆரம்பித்து  விட்டால் ஆபத்தாகி விடும் அவர்களுக்கு என்று நன்கு அறிந்தவர்கள் அவர்கள்,,,அதனால் தான் நம்முடைய மூளையை மழுங்கடித்து விட்டனர் ,,,,,

நாம் திருந்தி விட்டால் என்ன ஆவது இந்த தேசம்,,,,






Monday, October 25, 2010

கடவுள் ?????


 கடவுள் இருக்கிறான் என்று சொல்லும் அன்பர்களுக்கு என்னுடைய கேள்விகள்,,,,

பெற்றவர்கள் செய்த பாவம் அதனால் தான் பிள்ளைகள் பாதிக்கபடுகிறார்கள் என்று சொல்லி தப்பிக்க நினைக்க வேண்டாம் ,,,,கடவுளுக்கு நீதி நேர்மை எதுவும் தெரியாதா? இல்லை பாவம் செய்தவர்களை தண்டிக்க பயமா ?

இது எப்படி இருக்கிறது என்றால்,,,பாவம் செய்தவர்களை விடுத்து சம்பந்தம் இல்லாதவர்களுக்கு தண்டனை தருவது ,,,உன்னை அழ வைப்பதற்காக உன்னை விடுத்து உன் பிள்ளைகளுக்கு தண்டனை தருவது ,, இத்துனை குருரமானவனா கடவுள்,,, மனநிலை பாதிக்க பட்டவனா (ஆங்கலத்தில் சைகோ என்று கூறுவார்களே அவர்களை போன்று )

இல்லை அது அவர்கள் போன ஜென்மத்தில் செய்த தவறினால் இந்த ஜென்மத்தில்  கிடைத்த தண்டனை என்று சொல்லியும் தப்பிக்க நினைக்க வேண்டாம்,,,,

நாம் ஒரு வேலையை செய்கிறோம் ,,, அந்த வேலையை திறம்பட செய்தால் அதை நாம் தொடர்ந்து செய்வோம் ,,,, முடியவில்லை என்றால் முயற்சித்து பார்போம் ,,,, அதற்கும் முடியவில்லை என்றால் அந்த வேலையை விட்டு விடுவோம் ,,,, சாதாரண மனிதர்களாகிய நமக்கே இது பொருந்தும் போது,,,, ஒரு மனிதனை நல்லவனாக கூட படைக்க தெரியாதா கடவுள் அந்த வேலையை தொடர்வது அபத்தமானது ,,,, அதுவும்மின்றி அவனை அந்த ஜென்மத்தில் தண்டிக்காமல் அடுத்து ஜென்மம் வரை காத்திருப்பது எந்த வகையில் நியாயம்,,,,இந்த ஜென்மத்தில் அவன் போன ஜென்மத்தில் செய்த பாவம் தெரியவா போகிறது,,,,

கடவுள் உண்டா என்று கேட்பவர்களுக்கு நீங்கள் அதிகபட்சமாக அளிக்கும் பதில்(பதிலில்லை கேள்வி ) --->> உயிர் என்று ஒன்று இருந்தால் அதை கண்ணில் காட்டுங்கள் ,,,

கடவுளை உணரத்தான் முடியுமா என்றால் உங்கள் பதில் ---->>>காற்று இருப்பதாய் உணரதான் முடியும்  கண்ணில் பார்க்க முடியாது அதுபோலதான் கடவுள் என்று எவ்வளவு நாட்களுக்குதான் நீங்கள் உங்களையே ஏமாற்றி கொண்டு இருக்க போகிறீர்கள் ,,,,,

கண் முன்னால் நடக்கும் கெட்டவைகளைதட்டி கேட்க முடியாத தைரியம் இல்லாத கோழை  உங்களுக்கு   கடவுள் ,,,, 
அல்லது அவற்றை அரங்கேற்றி வேடிக்கை பார்த்து ஆனந்தம் அடைய  நினைப்பவன் உங்களுக்கு  கடவுள் ,,,, 

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் போரிலும் இருப்பான் சுனாமியுளும் இருப்பான் பூகம்பத்திலும் இருப்பான் பேரழிவுகளில் எல்லாம் இருப்பான் தீ விபத்துகளிலும் இருப்பான் போலிச்சாமியார்கலாகவும் இருப்பான் அவர்கள் கொடுக்கும் லஞ்சங்களை வாங்கிகொண்டு அரசியல்வாதிகளாகவும் இருப்பான் அடுத்தவர்களை காயப்படுத்தும் ரௌடியகவும் இருப்பான் பசிக்கு  பலியாகும் குழந்தையாகவும் இருப்பான் , ,,, இன்னும் எவ்வளவோ சொல்லாம் உங்கள் அரக்கத்தனம் கொண்ட கடவுளை பற்றி ,,,,,

பின்வரும் நிழற்படங்களை பாருங்கள் ,,,, அந்த முகங்களின் சிரிப்பு ,ஏக்கம்,,கஷ்டங்களை பாருங்கள் ,,, பிறகு சொல்லுங்கள் உங்கள் கருத்துக்களை ,,,  


























Repetitive Strain Injury( More common for computer users)

RSI
Repetitive Strain Injuries [In INDIA its commonly known as Computer Related Injuries(CRI)] is an umbrella term used to describe a collection of overuse disorders that affect the muscles, tendons, fascia, and neurovascular structures, typically in the neck, back and upper limbs, though virtually any part of the body, including head, jaw, chest, eyes, vocal cords and legs can get affected.

COMMON SYMPTOMS

Discomfort, fatigue or pain.
Swelling, redness, coldness or warmth.
“Catching” or “snapping” with movement.
Loss of grip strength, heaviness or clumsiness of the hand.
Stiffness.
Burning, numbness, tingling.
Visual strain.
The injury accumulates slowly leading to difficulty in day-to-day activities such as shaking hands, opening doors, holding newspapers, using a comb, or even holding a tea cup.
High Risk Groups
  • Computer Users
  • Musicians
  • Health Professionals: Surgeons, Dentists, Nurses, Massage Therapists
  • Laboratory workers
  • Teachers
  • Manual Labourers, Assembly Line Workers
  • Check out clerks
  • Hairdressers
  • Butchers
  • Sportspersons
  • Children
  • Housewives
Prevalence
  1. 15-25% of all computer users worldwide (both vocational and recreational) are estimated to have RSI. By this estimate, over 5 million Indian computer users (out of an estimated 28 million) may already be having RSI.
  2. RSI accounted for 66% of all work-related illnesses in USA (1999).
  3. A survey of 500 software professionals at Hyderabad in 2000 revealed that over 50% had symptoms of established RSI.
  4. Preliminary results of our ongoing prospective study among over 35,000 Indian computer professionals (2001-2008) found that over 75% reported musculoskeletal symptoms. This is the largest study ever undertaken to identify the prevalence, causes and results of treatment of Computer Related RSI.
Why should you bother about RSI?
  1. If you are reading this, even YOU could be at risk! NO ONE is immune to RSI: whether you are a week old in the industry or whether you are the C.E.O.
  2. RSI can seriously disrupt work and domestic life. We know of 70 young Indian computer professionals who have lost their jobs due to advanced, neglected RSI, since 2001.
  3. RSI is not a compensable occupational illness in India, even though over $250 billion are spent every year in USA as a consequence of RSI. There are no protective laws once workers get injured and are unable to work productively. The onus of RSI prevention is entirely on Indian workers.
  4. If RSI is not diagnosed and treated correctly and at an early stage, it can lead to a dreaded and crippling complication called Reflex Sympathetic Dystrophy.

Social costs of RSI
Economic costs of RSI
Diminished health
Decreased productivity & quality
Psychosocial consequences, e.g., anxiety, stress and depression
Lost wages
Diminished community involvement
Absenteeism
Diminished ability to participate in recreational activities
Doctor visits, cost of medical procedures and ergonomic modifications
Overall diminished quality of life
Employee turnover

Recruiting and training new staff

Retraining injured workers

Decreased employee morale

Compensation expenditures
Current scenario in India
  • Early identification of RSI and competent medical intervention is critical to arrest and reverse the injury in its early stages
  • Unfortunately, Indian medical professionals (in general) are not equipped to diagnose or treat RSI's, since it is a relatively recent phenomenon here. Ergonomics, RSI and Myofascial Disorders do not even find a passing mention in the Indian Medical Curriculum and it is not unusual to find Indian doctors (even specialists) and physiotherapists who have not even heard of RSI, let alone have the ability to treat it.
Top pitfalls in RSI Treatment in India
  1. Misdiagnosis as "Spondylitis, "Arthritis," "Slipped Disc," or "Muscle Sprain" seems to be the rule rather than an exception. Diagnosis of RSI is entirely based on a skilled musculoskeletal examination by an expert, and no "special" tests including MRI scans or nerve conduction studies can reliably diagnose it.
  2. Inappropriate medications, e.g., corticosteroids (or Cortisone), antidepressants, Vitamin B12 and multi-vitamins, Unspecified Health Pills and Oils, etc. Medicines and potions (whether Allopathic or Alternative) make little difference in the long term.
  3. Conventional physiotherapy is usually ineffective (Ultrasound, Short Wave Diathermy, etc.) and sometimes dangerous (traction and isometric/resistive neck exercises).
  4. Inappropriate surgery for a presumed diagnosis of Carpal Tunnel Syndrome or Slipped Disc, with disastrous consequences.
  5. Total reliance on fancy ergonomic gadgetry, special chairs, wrist rests, split keyboards, anti-glare screens, etc. to prevent RSI, while ignoring human factors (e.g., practical training in posture, body awareness, typing technique, breaks)
  6. Often, RSI sufferers are told "it's all in your mind" and the only way to recover is to get "it out of your mind!" No further clues are usually provided as to how to achieve this laudable goal. Worse, others are condemned to referral to a psychiatrist because the "specialist" could not find anything wrong on examination or investigations.
  7. No significant attempts at identifying and correcting predisposing factors for RSI, e.g., ergonomic or postural problems.
  8. Alternative medicine practitioners who practice a single technique often have a single-track approach to diagnosis and treatment ("when the only tool you have is a hammer, everything looks like a nail!"). Most have no knowledge whatsoever of RSI and can severely aggravate an existing RSI and prolong the recovery period. However, some modalities like Yoga, Tai Chi and Alexander Technique, when used appropriately and in a holistic environment, are beneficial in RSI.

Saturday, October 23, 2010

விவாகரத்து

விவாகரத்து
மகனுக்கும் பெற்றோருக்கும் இடையே
மருமகள் வந்த பின்னே  ,,,,

சொல்ல மறந்த வார்த்தைகள் !!!

நெடு நாட்களாய் எழுத நினைத்த ஒன்றை எழுத முற்படுகிறேன் 
முடியவில்லை என்னால் வார்த்தைகள் நட்சத்திரங்களை போல சிதறி கிடக்கிறது 

எழுத நினைத்த அவளோ இன்று என்னுடன் இல்லை,,,
பின் எதற்காக எழுதிகிறாய் என்று என் மூளை கேட்கிறது ???
இருக்கும் பொழுது சொல்ல நினைத்தவைகளை இப்போதாவது 
சொல்லிவிடு அவள் இருப்பதாய் உணர்ந்து என்று என் மனது விம்மியது,, 

அவள் கோபமாக பார்க்கும் பார்வையை ரசிப்பதற்காக பொய்யான சண்டை போட்டதும் ,,
அவள் அழகான கால் கொலுசின் சத்தத்தை அவளுக்கு தெரியாமல் ரசித்து கேட்டதும்  
அவள் விரலின் சுவையறிய என் விரலை நான் வெட்டிக்கொண்டதும் 
அவள் இதழ்களில் இருந்து வரும் சிரிப்பிற்காக பல கோமாளித்தனங்களை நான் செய்ததும்
அவள் அழகான  முகத்தை காண நான் பேருந்து நிறுத்தத்தில் தவமாய் நின்றதும் 
அவள் இடம் நான் சொல்லாமல் விடுத்த வார்த்தைகள் பல உண்டு ,,

நெடும்தூரம் சென்றவள் ,,என் கண்ணில் இருந்து மறைந்தாலே தவிர என் நினைவுகளில் இருந்து அல்ல ,,,,
காற்று மேகத்தை தழுவும் பொழுது மழை வரும் அது போல 
இன்றும் அவளின் நினைவலைகள் என்னை தழுவும்  பொழுது கண்ணில் நீர் வருகிறது ,,,,,

Wednesday, October 20, 2010

அதோ அவள் நடந்து செல்கிறாள் கடற்கரையில் ,,,,,,,

அதோ அவள் நடந்து செல்கிறாள் கடற்கரையில் ,,,,,,,

தன் அழகிய மெல்லிய வளைந்த பாத தடங்களை ஒன்றன் பின் ஒன்றாக விடுத்து செல்கிறாள் ,,,,,
வேகமாக வந்த கடல் அலைகள் அவள் அழகிய பாத தடங்களை வலிக்காமல் அழித்து விட்டு சென்றன ,,,,,

நான் கோபமாக அலைகளை நோக்கி கேட்டேன் , என்ன திமிர் உங்களுக்கு என்னவளின் பாத தடங்களை அழித்து விட்டு செல்கிறீர்கள் !!

அலைகள் ஒன்றாக கூறியது, கோபப்படாதீர்கள் !!!அந்த தடங்களை நாங்கள் அழிப்பது இல்லை ,,,,
அந்த அழகிய தடங்களின் மீது மணலை நிரப்பி எங்களுடனே பத்திரமாக வைத்து கொள்கிறோம்,,,,
இல்லையென்றால் வேறு யாராவது மிதித்து அழித்து விடுவார்கள் என்று !!!!

Sunday, October 17, 2010

பிச்சைக்காரன்!!!!!!!

அன்பிற்கு ஏங்கும் அகதிகளை 
அடிமைகளாய் ஏற்க துணியும் 
அன்பில்லாத பிச்சைக்காரர்களே 

கண்ணுக்கு தெரியாத கடவுளுக்கு தனியறை கொடுக்க தெரிந்த உனக்கு 
கண்ணுக்கு தெரிந்த கடவுள்களுக்கு வீட்டில் இருக்க இடமில்லையா ?

ஐந்தறிவுள்ள ஜீவனுக்கு பசியாற்ற சோறு போட முடிந்த உன்னால் 
ஆறறிவுள்ள ஜீவன்களுக்கு பசியாற கொடுக்க உணவு இல்லையா ?

நீ பெற்ற குழந்தைகளோடு  அன்புடன் வாழ தெரிந்த உனக்கு 
உன்னை பெற்றெடுத்த ஜீவன்களோடு அன்புடன் வாழ தெரியாமல் போனது எப்படி?

தன் கருவறையில் இடம் கொடுதவளுக்கும் 
தன் வியர்வையால் உன்னை உயர்தியவற்கும் 
நீ கொடுக்கும் பரிசு முதியோர் இல்லம். 

உனக்கு கோடி கணக்கில் பணம் இருந்தாலும் 
நீ என்றும் அன்பில்லாத பிச்சைக்காரன்தான்....